திரை விமர்சனம்

மார்ச் 8, 2009

Punisher: War Zone (2008): ஆளைத் தூக்கு!

ஆங்கில படங்களில் ஆக்ஸன் படங்கள் என்று ஒரு வகை, ‘gore’ என்று அழைக்கப்படும் இரத்தம் சிந்துகின்ற, அங்க அவயவங்கள் பறப்பதாக இன்னொரு வகை. இந்தப் படம் இரண்டு வகையிலும் சேர்ந்து நிற்கின்றது. படம் அநியாயத்தைத் தட்டிக்கேட்பதற்காக ஆயுதம் எடுக்கும் ஒருவரைப் பற்றியது. Frank Castle (Ray Stevenson) ஒரு விசேட இராணுவ படைத்துறையில் பயிற்றுவிப்பனராக இருந்தவர். மனைவி, பிள்ளையோடு பொதுவிட பூங்காவொன்றிலே விளையாடிக் கொண்டிருக்கும் தருணத்தில், இரு திருடர் கூட்டங்களிடையே எழும் துப்பாக்கிச் சண்டையில் துரதிஸ்டவசமாக மனைவியையும், பிள்ளையையும் காவு கொடுக்கின்றார். மிகுந்த கோபத்திற்குள்ளாகும் Frank, ஊரில் இருக்கும் திருட்டுக் கூட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக களையெடுக்கும் “punisher” (தண்டிப்பாளன்) ஆக உருவெடுக்கின்றார். களையெடுப்பது என்றால், காவல்துறையினரிடம் அகப்படுத்துவது இல்லை — இரவோடு இரவாக ஆட்களைத் “தூக்குவதுதான்.” இது படத்தின் முன்கதை. இந்தப் படத்தின் கதை, Frank விடும் ஒரு தவறை ஒட்டிப் போகின்றது. கொள்ளைக் குழு ஒன்றை கொலை செய்யும் தருவாயில், அந்தக் கள்ளர் குழுவோடு ஒற்றனாக இருந்து செயற்படும் காவல் துறை அதிகாரி ஒருவரையும் அடையாளம் தெரியாமல் கொலை செய்து விடுகின்றார் Frank. வழமையாக Punisher’இன் நடவடிக்கையை கண்டும் காணாமலும் (சிலவேளை உதவியாகவும்) இருக்கும் காவல் துறை punisher’ஐ நெருக்க வேண்டிய சூழ்நிலை. மற்றப் பக்கம் செய்த தவறினால் மனமுடைந்து punisher வேடத்தையே விட்டெறிய நினைக்கும் Frank. இவை இவ்வாறு இருக்க இன்னொரு பிரச்சினை எழுகின்றது — punisher’இன் தவறுதலான கொலையால் தமது குழு காவல் துறையினரால் ஊருடுவப் பட்டிருக்கின்றது என அறியவரும் அந்த கொலை/கொள்ளைக் குழு இறந்த அந்த காவல்துறை அதிகாரியின் குடும்பத்தினை குறி வைக்கின்றது. கணவனைத் இழந்ததற்கு punisher’ஐ முழுக் காரணமாக கருதி punisher’ஐ இறந்த அந்த அதிகாரியின் மனைவி வெறுத்தாலும், அந்த விதவையையும் அவரின் குழந்தையையும் காப்பாற்றும் பொறுப்பும் punisher’இன் கையில் வந்து சேருகின்றது. அடித்து, நொருக்கி, சுட்டு, வெடித்து அவர்களை காப்பாற்றி, அந்த கொள்ளைக் குழுவை நிர் மூலமாக்குவது மிச்சக் கதை.

Punisher காதாபாத்திரம் காமிக்ஸ் புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்டது. எனவே, படத்தில் இருக்கும் வன்முறையையும், ‘gore’ஐயும் நெறியாக்கியிருக்கும் விதம் (editing) காமிக்ஸ் புத்தக வகையில் இருப்பது ஒருவிதத்தில் ரசிக்கக் கூடியதாக இருக்கின்றது. படத்தின் கடைசிக் கட்டத்தில் punisher எடுக்கும் முடிவும் நன்றாக இருந்தது. மற்றப்படி வழமையான ஆகஸன் படம்தான். “The Punisher” என்று 2004’ல் வந்த படமும் இதே காமிக்ஸ் புத்தக கதாபாத்திரத்தைப் பற்றியதுதான் என்றாலும், அந்தப் படத்திற்கும் இந்தப் படத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆக்ஸன் விரும்பிகள் பார்க்கலாம். அதிகூடிய வன்முறைகள் இருப்பதால் சிறுவர்களிற்கான படமில்லை.

“Punisher: War Zone” IMDB இணைப்பு

4 பின்னூட்டங்கள் »

 1. பகிர்வுக்கு நன்றி..
  பார்த்துவிட்டு சொல்கிறேன்..

  பின்னூட்டம் by Saravana Kumar MSK — மார்ச் 8, 2009 @ 10:21 முப | மறுமொழி

 2. நல்ல விபர்சனம்.
  டவுண்லேதாட் பண்ணியும் பாக்கல. இன்னிக்கே பாக்கவேண்டியதுதான்.
  2004ல் வந்ா படம் பார்த்திருக்கிறேன்இ அதுவும் பிடித்திருந்தது. ஆக இது அதன் தொடரென நினைத்துதான் டவுண்லோட் பண்ணினேன்.

  Twilight பாத்திட்டீங்களா? அதைப்பற்றி ஏதாவது……. plsssss
  thanks

  பின்னூட்டம் by Subash — மார்ச் 8, 2009 @ 4:33 பிப | மறுமொழி

 3. Twilight வலையிறக்கம் செய்து கொண்டிருக்கின்றேன். விமர்சனம் விரைவில் — நீங்கள் முந்திக் கொள்ளாவிடில்.. 😉

  பின்னூட்டம் by bmmaran — மார்ச் 8, 2009 @ 7:21 பிப | மறுமொழி

 4. //விமர்சனம் விரைவில் — நீங்கள் முந்திக் கொள்ளாவிடில்//

  எனக்கு இப்படி உங்கள் போல எழுத வராதுங்க.
  அந்த நாவல் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.
  தரவிறக்கி வைத்திருக்கிறேன்.
  ஆனாலும் இன்னும் பார்க்கவில்லை.
  உங்களிக் ட்ரேட்மார்க் வசனநடையில் படித்துவழட்டு பார்க்கலாம்.!!!
  எதிர்பார்த்திருக்கிறேன்
  நன்றிகள்

  பின்னூட்டம் by Subash — மார்ச் 9, 2009 @ 10:04 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: