திரை விமர்சனம்

மார்ச் 14, 2009

Watchmen (2009): அவரசரப்பட்டு பார்க்கத் தேவையில்லை

காமிக்ஸ் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களிலிருந்து என்ன எதிர்பார்ப்பீர்கள்? நிறைய ஆக்ஸன் இருக்கும், எல்லாரும் பார்க்கக் கூடியதாக இருக்கும், விறுப்பாக கிட்டத்தட்ட ஒரு இரண்டு மணித்தியாலம் சந்தோசமாக நேரத்தை ஓட்டலாம் — இப்பிடித்தானே நீங்கள் சொல்லுவீர்கள்? இந்த வரைவிலக்கணத்திற்கெல்லாம் வெகுவாக தள்ளி நிற்கின்றது கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக பரபரப்பாக எதிர்பார்க்கப் பட்ட Watchmen. இழு இழு என்று கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணித்தியாலம் படம், அதற்குள் தெளித்து விட்டது போல சில ஆக்ஸன் காட்சிகள், சிறுவர்களை இந்தப் படத்தை பார்க்க முடியாமல் பண்ண கொடூரமான வன்முறைக் காட்சிகளும் நிர்வாணக் காட்சிகளும். என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை! 😦

1980’களின் கடைசிப்பகுதியில் வெளியிடப்பட்ட காமிஸ் புத்தக தொடரின் திரைவடிவம்தான் இந்தப் படம். நான் இந்தப் படத்திற்கு முன்னர், அந்த காமிக்ஸைப் பற்றி கேள்விப்படவில்லை என்றாலும், அதற்கென்று ஒரு பெரிய இரசிகர் குழு ஒன்று இருக்கின்றதாம். அப்படியிருந்தும், அந்த காமிக்ஸை திரைக்குக் கொண்டுவர இத்தனை காலமும் தொழில்நுட்பம் முன்னேறியிருக்கவில்லையாம். படத்தைப் பார்த்தபின், எனக்கென்றால் அது காதில பூச்சுத்துகின்ற கதை போலதான் தோன்றுகின்றது.

1980’களின் நடுப்பகுதியில் நடப்பதாக படம் அமைந்துள்ளது. அந்த உலகத்தில் எல்லாம் உங்களுக்குத் தெரிந்தமாதிரித்தான் – Nixon அமெரிக்க ஜனாதிபதி, ரஸ்யா கியூபாவில் ஏவுகணைகளை குவிக்கின்றது, உலகம் அணுவாயுத அழிவின் வாசலில் நிற்கின்றது. இந்த உலகத்தில் புதியது என்னவென்றால் முகமூடி அணிந்து திரியும் superhero குழுவான “Watchmen.” 1950’களில் ஆரம்பமான இந்தக் குழு, இடையில் மக்களின் எதிர்ப்பினால் கலைக்கப்பட்டு விட, 1980’களில் இவர்கள் சிதறிப் போய் இருக்கின்றார்கள். படத்தில் குழப்பமே இந்தக் குழுதான். முதலாவது, எப்பவுமே நல்லவர்களான superhero’க்களைப் பார்த்துப் பழகிய எங்களிற்கு குளப்பமான குணாதியங்களைக் கொண்ட இவர்களை ஜீரணிக்க முடியவில்லை. அடுத்தது, அந்தக் குழுவில் ஒரு சிலருக்குத்தான் அமானுக்ஷ்ய சக்தியுண்டு; மற்றவர்களெல்லாம் எப்பிடி superhero ஆனார்கள் என்று எனக்கென்றால் தெரியவில்லை. அடுத்த குழப்பம், எவ்வாறு மக்கள் இவர்களை வெறுக்கத்தொடங்கினார்கள் என்று.

என்னவோ, இப்பிடியிருக்கும் காலத்தில், ஓய்வு பெற்ற Watchmen’இல் ஒருவர் கொலை செய்யப்படுகின்றார். அது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்று நம்பப் பட்டாலும், இன்னொரு Watchmen அங்கத்தவர் மீதும் கொலை முயற்சி செய்யப்பட மர்மம் அதிகரிக்கின்றது. இது பிரிந்து போன Watchmen உறுப்பினர்களை ஒன்று சேர்க்கின்றது. Watchmen கொலை மர்மத்திற்கும் அமெரிக்க-ரஸ்ய அணுவாயுத யுத்தத்திற்கும் முடிச்சுப் போடுவது கதை.

அந்த காமிக்ஸ் புத்த ரசிகர்கள் படத்தை இரசிப்பார்கள் என்று நம்புகின்றேன். நானோ, படத்தின் முன்பாதியில், பத்து நிமிடத்திற்கு ஒருமுறை “என்னதான் நடக்குது இங்க?” என்று என்னை நானே கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த ஏற்றம் இறக்கமில்லாத பின்னணி வர்ணணைக் குரல் வேறு வெறுப்பேற்றிக் கொண்டிருந்தது. OK, படம் மொத்தத்தில் குப்பை என்று சொல்லுவதற்கும் இல்லை — ஒரு வித்தியாசமான முடிவு, சிறப்பாக எடுக்கப் பட்ட ஆக்ஸன காட்சிகள், தனக்கென தனித்துவத்தைக் காட்டிக் கொள்ளும் சில காட்சி அமைப்புகள், இப்படி ரசிப்பதற்கு பல அம்சங்கள் படத்தில் இருக்கின்றன. என்றாலும், இவை மட்டுமே நல்லதொரு படத்தை தருவதற்கு போதும் என நம்பி படத்தை எடுத்திருப்பிருப்பதுதான் பிழை. தங்களிற்கு special effects திறமையாகச் செய்யத்தெரியும் என்பதற்காக காரணமில்லாமல் அவற்றைத் திணித்திருப்பது (அந்த செவ்வாய்க் கிரக காட்சிகள்) பைத்தியம்மாக்குகின்றது. இத்தோடு தேவையில்லாத பாலியற் காட்சிகள் (அட, நடிகர்கள் நிர்வாணக் கோலத்தில அழகாக இருந்தாலாவது பரவாயில்லை!)

படம் ஓடும்… அந்தளவுக்கு படம் பிரபல்யம்; நானும் அதால்தானே படம் திரையிடப்பட்டு முதலாவது கிழமையே போய்ப் பார்த்தது. தவிர, படம் கிட்டத்தட்ட “Sin City”, “300” படங்களை நினைவூட்டுமாறு எடுக்கப் பட்டுள்ளது சிலருக்குப் பிடிக்கும் (நான் அந்த இரு படங்களையும் மிகவும் இரசித்திருந்தாலும் இதை இரசிக்க முடியவில்லை.) கருமையான எண்ணக்கருவை படம் கொண்டிருப்பதும் சிலருக்குப் பிடிக்கும். ஏதோ நான் நொந்து போய்வந்ததை சொல்லிவிட்டேன். நிச்சயமாக இதைப் படிக்கும் யாராவது ஒருவர், நேர் எதிரான விமர்சனம் ஒன்றைத் தெரிவிக்கலாம். நான் சொல்லுவதெல்லாம் அவாப் பட்டுப்போய் படத்தைப் பார்க்காமல், ஆற அமர யோசித்துவிட்டு படத்தை பாருங்கோ என்பதுதான்.

“Watchmen” IMDB இணைப்பு

3 பின்னூட்டங்கள் »

 1. hummmm super hero movie ன்னாலே ஒரு hero தான் இருக்கணும். அல்லாட்டி சொதப்பிடும்.fantastic 4 உம் அப்படித்தான். படிக்கும்போதுதான் சுவாரசியமே.

  its my fav comic.
  கண்டிப்பாக தியேட்டரில்தான் பார்ப்பேன்.

  சுடச்சுட விமர்சனத்திற்கு நன்றிகள்.

  பின்னூட்டம் by Subash — மார்ச் 15, 2009 @ 3:00 பிப | மறுமொழி

 2. Fantastic 4 படத்திலயாவது நான்கு hero’க்கள் இருந்தார்கள்; இதுவோ கிட்டத்தட்ட hero’க்களே இல்லாத superhero படம்!!

  பின்னூட்டம் by bmmaran — மார்ச் 15, 2009 @ 10:00 பிப | மறுமொழி

 3. @சுபாஷ்
  X-Men திரைப்படங்களில் பல ஹீரோ தானே???
  இப்போ மஜஸ்டிக் சினிமாவில் ஒடுது.. பாருங்க…!
  திரைப்படத்தைப் பார்த்து ரொம்பவுமே கடுப்பாகி வந்தன்.

  பின்னூட்டம் by Mayooresan — ஜூன் 23, 2009 @ 2:25 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: