திரை விமர்சனம்

மார்ச் 22, 2009

The Happening (2008): என்ன நடந்தது சியாமளனுக்கு..?

The Sixth Sense” (1999) பார்த்த காலத்திலேயிருந்து Night சியாமளனின் தீவிர ரசிகன் நான். அதன் பின் வந்த அவரது சகல படங்களையும் பார்த்திருக்கின்றேன். என்றாலும், The Sixth Sense அளவுக்கு இன்னொரு படத்தை தர அவரால் முடியவில்லை. “Night சியாமளன் தரமான முடிவு” மாதிரியான முடிவை நாங்கள் படத்தில் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டதுதான் அதற்கு காரணமோ தெரியாது. இதுவரை காலமும் வந்த இவரது படங்களிலேயே மிகப் பெரிய ஏமாற்றம் இந்தப் படம். இதற்கு முந்திய “Lady in the Water” படத்தில் fantasy கருவமைப்புக்குத் தாவிய Night சியாமளன், மீண்டும் தனக்கு பழக்கமான மர்மம், பயங்கரம் என்ற கதைக்கருவுக்கு வந்திருக்கின்றார் இந்தப் படத்தில். என்றாலும், ஹாலிவூட்டில் ஆயிரம் தரம் முதலேயே எடுக்கப் பட்ட கதையை இவரும் முயன்றிருப்பதுதான் ஏனென்றுதான் தெரியவில்லை!! 😦

New York’இல் மக்கள் திடீரென ஒருவிதமான நோய்க்கு உண்டாகின்றனர் — விளைவு, எல்லோரும் இடம், முறை பராமல் தற்கொலை பண்ணத்தொடங்குகின்றனர்! இது பயங்கரவாதிகளின் தாக்குதல் என (வழமை போல) நினைக்கின்ற அரசாங்கத்தின் சித்தாந்தங்களிற்கு அப்பாற்பட்டு, மிக விரைவாக அண்டைய மாநிலங்களிற்கும் பரவத்தொடங்குகின்றது இந்த நோய். பக்கத்து மாநிலத்தில் இருக்கும் Philadelphia நகரத்தில் பாடசாலை விஞ்ஞான ஆசிரியர் Elliot (Mark Wahlberg). இந்த நோயைப்பற்றி அறியும் இவர் மனைவி Alma’வுடன் (Zooey Deschanel) நகரத்தைவிட்டு தப்பி ஓடத் தீர்மானிக்கின்றார். வேகமாக பரவும் அந்த நோயோடு இவர்கள் கண்ணாம் பூச்சி ஆட்டம் ஆடுவதை ஒட்டி படம் போகின்றது.

படத்தில் வழமை போல “Night சியாமளன் முடிவு” இல்லாததுதான் படத்தில் வித்தியாசம். 8-( ஹாலிவூட்டில் ஆஸ்காரிற்கு எதிரான விருது Razzi விருதுகளாகும். ஒவ்வொரு ஆண்டும் ஹாலிவூட்டில் திறமையைக் காட்டியவர்களிற்கு ஆஸ்கார் விருது அளிக்கப்பட, ஹாலிவூட்டை நாறடித்தவர்களிற்கு Razzi ‘விருது’ அளிக்கப்படும். சென்ற ஆண்டில், மோசமான படம், மோசமான இயக்குணர், மோசமான நடிகர், மோசமான கதைவசனம் என்று நான்கு Razzi ‘விருதுகளிற்கு’ தெரிவானது இந்தப் படம் (நல்லகாலத்திற்கு ஒன்றையும் வெல்லவில்லை.) Mark Wahlberg சிறந்தவொரு நடிகர், இதிலே சொதப்பியிருக்கின்றார் 😦 (இடைக்கிடையில், இவரையும் அந்த நோய் பாத்தித்துவிட்டதோ என்று எண்ணும்வகையில்!) கதைவசனமும் அப்படியே… என்றாலும், இயக்கத்தை அந்தளவு மோசம் என்று சொல்ல முடியாது. அந்த நோயின் பயங்கரத்தை காட்டுவதில் நெஞ்சை சில்லிட வைக்கின்றார் சியாமளன். ஒளிப்பதிவும் அவ்வாறே. கொஞ்சம் நட்டுக் கழண்ட பாத்திரம் ஒன்றில் வரும் Zooey Deschanel’இன் நடிப்பையும் பாராட்டலாம். ஒரு விதத்தில் பார்க்கப்போனால், Night சியாமளன் மட்டும் இதை எடுத்திருக்காவிடில் இதை நல்ல படமென்றே சொல்லிவிடலாம். என்றாலும், சியாமளனிடமிருந்து வரும்போது அதை மன்னிக்க முடியவில்லை.

வந்த சியாமளன் படங்களில் முதலாவதாக ‘R’-முத்திரை தாங்கி வந்திருக்கின்றது படம், சிறாருக்கு ஒப்பாத பயங்கரக் காட்சிகளை கொண்டிருப்பதால். நீங்கள் சியாமளன் ரசிகர் எனின் எப்படியும் இதைப் பார்ப்பீர்கள். மற்றவர்கள் நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை.

“The Happening” IMDB இணைப்பு

9 பின்னூட்டங்கள் »

 1. இதுக்கெல்லாம் எழுதி டைம் வேஸ்ட் பண்ணுறீங்களே! 😦

  பின்னூட்டம் by ஹாலிவுட் பாலா — மார்ச் 22, 2009 @ 4:17 முப | மறுமொழி

  • நல்ல படங்களிற்குத்தான் விமர்சனம் எழுதவேணும் என்று இல்லைத்தானே.. 😉 மற்றவர்களாவது தப்பிப் போகட்டும் என்றுதான்..

   பின்னூட்டம் by bmmaran — மார்ச் 22, 2009 @ 4:56 முப | மறுமொழி

 2. சில நாட்களுக்கு முன்னால் இந்த திரைப்படத்தைப் நான் பார்த்தேன். நைட் சியாமளனைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் நான் பார்த்த இவரது முதலாவது திரைப்படம் இதுதான் அத்துடன் இந்த வகையில் அமைந்த திரைப்படமும் இதுதான். எனக்கு ஏதோ பிடித்துப் போய்விட்டது. அப்படியே மற்றய நண்பர்களிற்கு பரிந்துரைத்து வாங்கிக்கட்டியது அடுத்த கதை 😉

  பின்னூட்டம் by Mayooresan — மார்ச் 23, 2009 @ 5:26 முப | மறுமொழி

 3. ஹம்ம்ம்ம். ஆனா படத்திற்கு பெரிய ஹிப் குடுத்தாங்களே!!!

  நிஜமாக கேட்கிறேன். யாரந்த சியாமளன் ?

  பின்னூட்டம் by Subash — மார்ச் 23, 2009 @ 10:05 முப | மறுமொழி

 4. ஓஓஹ்
  தல நம்ம பேவரைட் the last air bender படத்தை டைரக்ட் பண்ரார். ம்ம் ( 2010 ரிலீஸ்)

  ஆனா James Cameron 2009 Dec ல் Avatar ( the last air bender ) படதை ரிலீஸ் பண்ரார்.
  அப்ப இவரு என்னத்தை எடுக்கறார் ??

  பின்னூட்டம் by Subash — மார்ச் 23, 2009 @ 10:10 முப | மறுமொழி

 5. இந்த சியாமளன் பிறப்பால் ஒரு தமிழன் என்று யாரோ சொல்லிக் கேட்ட ஞாபகம்!!

  பின்னூட்டம் by Mayooresan — மார்ச் 23, 2009 @ 10:28 முப | மறுமொழி

 6. சியாமளன் பாண்டிச்சேரியில் மலையாள அப்பாவுக்கும், தமிழ் அம்மாவுக்கும் பிறந்தவர்.
  http://en.wikipedia.org/wiki/M._Night_Shyamalan

  மயூரன், இவரது “The Sixth Sense” படத்தை எடுத்துப்பாரும். அதுதான் இவரின்றை வேலைகளில் மிகச்சிறந்த வேலை. அந்தப் படத்திற்காக ஆஸ்காரிற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். “Unbreakables”, “The Village” கூடப் பரவாயில்லை. நான் விமர்சனத்தில் சொன்னமாதிரி, “the happening”தான் உங்கட முதலாவது படம் எண்டால் அதை நீங்கள் ரசித்திருப்பது வியப்பில்லை. இவரது மற்றைய படங்களைப் பார்த்தவர்களிற்கு இது ஒரு பெரிய ஏமாற்றம்.

  பின்னூட்டம் by bmmaran — மார்ச் 23, 2009 @ 11:50 முப | மறுமொழி

 7. ம்ம்ம்
  முதலில் இந்தப்படத்தை பார்த்துவிட்டு பின்னர் மற்றய படங்களை பார்த்தால் போயிற்று !!!!
  The Sixth Sense படத்தை பார்க்கவேண்டுமென ஆவலாயிருக்கிறது. ( முந்தி பார்த்தேனா தெரியாது )
  இதன் விமர்சனம் கிடைக்குமா?
  நனறி

  பின்னூட்டம் by Subash — மார்ச் 24, 2009 @ 9:07 முப | மறுமொழி

 8. The Sixth Sense’ற்கு விமர்சனம் எழுதவேண்டும் என்றால் நான் அதை திரும்பவும் பார்க்கவேண்டும். அது சரிவராது.

  பின்னூட்டம் by bmmaran — மார்ச் 24, 2009 @ 11:36 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: