திரை விமர்சனம்

மார்ச் 24, 2009

Zack and Miri Make a Porno (2008): பேசாமல் அதையே எடுத்திருக்கலாம், இந்தப் படத்தை விட்டுவிட்டு.

ஹாலிவூட்டில் இடைக்கிடை நகைச்சுவைக்கும் அருவருப்புக்கும் இடையில் நின்று ஊசலாடுகின்ற மாதிரி சில படங்கள் வரும். அந்த வகையில் இதுவும் ஒன்று. படம் தணிக்கையின் கத்திரிக்கோலில் இரண்டு தரம் மாட்டுப்பட்டு கடைசியாக ஒருவாறு ‘R’-முத்திரையுடன் வந்திருக்கின்றது. இந்த படத்தின் முகப்புப் படத்தைக்கூட (poster) தணிக்கை அனுமதிக்காமல் கடைசியாக இங்கே பக்கத்தில் காட்டப்பட்டிருக்கும் படத்தோடு திருப்திப்பட வேண்டியதாயிற்று! இந்த போஸ்டர்தான் படத்தில் மெச்சக் கூடிய ஒரே ஒரு விடயம்.

படத்தின் கதை மிகவும் எளிமையானது — பள்ளிக்கூடத்திலிருந்தே நண்பர்கள் Zack’உம் (Seth Rogen) Miri’யும் (Elizabeth Banks). வாழ்க்கையில் பொதுவாக எதிலும் முன்னேறாத இருவரும் சிறுசிறு வேலைகளைச் செய்து கொண்டு ஒரு வீட்டில் இரு அறையில் வசித்துவருகின்றார்கள். பணத்தை சரியாக பாவிக்கத்தெரியாத இருவரும், கையில் காசில்லாது, இருக்கின்ற வீட்டிலிருந்து துரத்தப் படும் நிலையில் இருக்கின்றார்கள். வேறு ஒரு உன்னத யோசனையும் வராத நிலையில் ஒரு நீலப்படத்தை (porn) எடுத்து அதில் நடிக்கவும் தீர்மானிக்கின்றார்கள். இவ்வளவு காலமும் சும்மா நண்பர்களாகவே வாழ்ந்து வந்த இருவரும், படத்திற்காக உடலுறவு கொள்ளவேண்டிய தேவை. அது சிக்கலாகி, பிறகு காதலாவது கதை.

படம் சிரிக்க வைக்கின்றது என்றாலும், அந்த ஊத்தைப் பகிடிகள் வெறுப்பேறுகின்றன. அது எனது வயதுக்குத்தான் பொருந்தவில்லையோ தெரியாது. நீங்கள்தான் பார்த்துவிட்டு சொல்லவேண்டும். அந்த நகைச்சுவைகளைத் தவிர படத்தில் ஒன்றுமேயில்லை. உடலுறவு, தனியே உடல் சம்பந்தப்பட்ட விடயமல்ல என்பது கதையின் மூலக்கரு. என்றாலும் கதையிலேயோ, காதலிலேயோ லாஜிக்கே இல்லை. நடிப்புத்திறனைக் காட்டுவதற்க்கோ படத்தில் எவ்வித தேவையும் இல்லை. நீங்கள் இவ்வாறான நகைச்சுவைகளை, அல்லது Elizabeth Banks’ஐ (என்னைப்போல) இரசிப்பவரானால் பார்க்கலாம். மற்றப்படி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

“Zack and Miri Make a Porno” IMDB இணைப்பு

7 பின்னூட்டங்கள் »

  1. வெறும் குப்பை திரைப்படம். இதைப் பார்த்து… என்ன கொடுமை சார் என்று தலையில் அடித்துக்கொண்டேன்.

    பின்னூட்டம் by Mayooresan — மார்ச் 24, 2009 @ 8:23 முப | மறுமொழி

  2. நானும் பார்த்து சிரித்த படம்.
    Elizabeth Banks ஆகவே!!!!!!!
    ஹிஹி

    பின்னூட்டம் by Subash — மார்ச் 24, 2009 @ 9:03 முப | மறுமொழி

  3. //காதலிலேயோ லாஜிக்கே இல்லை//
    உங்கள் வயதுக்குத்தான் பொருந்தவில்லை..

    பின்னூட்டம் by அனாமதேய — மார்ச் 24, 2009 @ 2:49 பிப | மறுமொழி

  4. This is a pure american slapstick comedy. Those who had seen Kevin Smith’s previous movies like Clerks I & II, Dogma, Jay & Silent Bob strikes back will know his real fun.. So people like you cant enjoy this comedy…unless you know American culture or lived there…

    பின்னூட்டம் by கிடுக்கி — மார்ச் 25, 2009 @ 4:53 முப | மறுமொழி

  5. இந்த படம் அத்தனை மோசமில்லை தல (என்னைப்பொருத்தவரை). டைரக்டரின் Clerks 1 & 2 பாருங்க. பின்னியிருப்பார் மனுசன்.

    வெறும் டயலாகுக்கே NC-17 கிடைச்ச ஒரே படம் Clerks 1.

    பின்னூட்டம் by ஹாலிவுட் பாலா — மார்ச் 25, 2009 @ 12:49 பிப | மறுமொழி

  6. mmm… I am living in this culture for last 9 years. Still I couldn’t enjoy this movie. May be, I just don’t enjoy that part of the culture here. 🙂 As I said, may be it’s just me. If there weren’t that many people who haven’t enjoy this movie, this wouldn’t have got that higher rating in IMDB. I know that Kevin’s previous movies are better. But never seen those. I have seen him acting (“Die Hard 4,” “Catch and Release”); I like him as an actor.

    பின்னூட்டம் by bmmaran — மார்ச் 25, 2009 @ 12:50 பிப | மறுமொழி

  7. //I am living in this culture for last 9 years//
    Have you been living in the States?
    I am Canadian, therefore I am American. It’s true but sounds strange

    பின்னூட்டம் by கிடுக்கி — ஏப்ரல் 9, 2009 @ 5:00 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: