திரை விமர்சனம்

மார்ச் 28, 2009

The Reader (2008): காலத்தை வென்ற காதல்

பொதுவாக Drama வகையிலான படங்கள் எனக்குப் பொருத்தமானவையல்ல — அவற்குக்கு கவனம் கொடுத்து பார்த்து முடிப்பது என்பது எனக்குக் கொஞ்சம் கஸ்டமான விடயம். அப்படியான என்னையும் சிந்தை சிதறாது இரண்டு மணித்தியாலம் கட்டிவைத்திருந்தது இந்தப் படம்! ஐந்து ஆஸ்காரிற்கு தெரிவாகி, அவற்றில் ஒன்றைத் தட்டிக் கொண்டு போன படம்; அது ஏன் என்பது படத்தைப் பார்க்கும்போது தெளிவாகத் தெரிகின்றது.

1958’ஆம் ஆண்டு ஜேர்மனி — இரண்டாம் உலகயுத்ததை முடித்துக் கொண்டு அதன் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வருகின்றது. இங்கே 36 வயதான Hanna’வுக்கும் (Kate Winslet), 15 வயதான Michael’க்கும் (David Kross) இடையில் ஆரம்பிக்கும் காதலைச் சித்தரிக்கின்றது படத்தின் முன்பகுதி. Hanna ஒரு பேரூந்து நடத்துணர் (ticket conductor). இவர் கிட்டதட்ட பாடசாலைப் பையனான Michael’ஐ வழைத்துப் போடுகின்றார் என்றே சொல்லலாம். இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு பெரும்பாலும் உடலுறவு சம்பந்தப் பட்டது என்றாலும், அதில் இன்னுமொரு பெரும்பங்கு, Hanna’வின் வற்புறுத்தலில் பேரில், Michael அவளிற்கு புத்தகம் வாசித்து கதை சொல்வதில் போகினறது. மூக்குவரையில் காதலில் மூழ்கி இருக்கும் Michael, Hanna என்னசொன்னாலும் அதற்கு இணங்கிப் போகின்றான். இவர்களின் கள்ளத்தனமான் இந்த உறவு இவ்வாறு சென்று கொண்டிருக்கும்போது, Hanna’வுக்கு ஒரு அலுவலக வேலைக்கான பதவியுயர்வு வருகினறது. அத்துடன் திடீரென தலை மறைவாகிவிடுகின்றாள் Hanna!

மிகவும் மனமுடைந்து போகும் Michael கொஞ்சம், கொஞ்சமாக தெளிந்து பல்கலைக் கழகத்திற்குச் செல்கின்றான். அங்கு வக்கீல் துறையில் படிப்பைத் தொடர்கின்றான். இவனது பல்கலைக் கழக படிப்பின் ஒரு பகுதியாக ஒரு நீதிமன்ற வழக்கை பார்வையிடவேண்டி வருகின்றது. ஹிட்லர் காலத்தில் யூத மக்களை அடைத்து வைத்திருந்து படுகொலை செய்வதற்கு பெயர் பெற்ற ஒரு சிறைச்சாலை காவலாளிகள் மீது, அங்கிருந்து தப்பிய ஒரு பெண் போடும் வழக்கு. வழக்கைப் பார்வையிட செல்லும் Michael’ற்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கின்றது — அங்கே குற்றவாளி கூண்டில் இருக்கும் ஆறு பேரில் ஒருத்தி Hanna! மிகுதிக் கதையை நான் இங்கு சொல்லக் கூடாது.

படத்தின் கதையோட்டம் மிகவும் அழகு; காதலில் மர்மம், மர்மத்தில் ஆச்சர்யம், இன்பத்தில் சோகம், சோசகத்தில் சுகம் என்று நுணுக்கமாக நெய்யப்பட்டிருக்கின்றது. நடிகர்கள் ஆளிற்கு ஆள் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கின்றார்கள். Kate Winslet இந்தப் படத்திற்காக ஆஸ்காரைத் தட்டிக்கொண்டது தகும் என்றாலும், அவரது முதிர்ச்சிக்கு ஈடு கொடுக்கின்றார்கள் மற்றைய அனைவரும். இளம் நடிகர் David Kross’உம் அபாரம். வயதுக்கு வந்த Michael ஆக வரும் Ralph Fiennes (எங்கட Harry Potter Voldemort) நெஞ்சத்தில் சுமையைக் கட்டிக்கொண்டு அவதிப்படும் பாத்திரத்தில் சிக்கென்று பொருந்துகின்றார். கொஞ்ச நேரத்திற்கு வந்து போகும் Lena Olin கூட பல்லாண்டு காலமாக மனதில் இருக்கும் வஞ்சத்தை விக்ஷமாகக் கொட்டும் வேளையில் செஞ்சை அள்ளிச் செல்கின்றார். படத்தில் கதை வசனங்கள் கூட அந்தமாதிரி! முக்கியமாக நீதி மன்றத்தில் Hanna அளிக்கும் பதில்களிலும், படத்தின் கடைசிக் கட்டத்தில் அந்த யூதமுகாமிலிருந்து தப்பிவந்த பெண்ணோடு Michael உரையாடும் காட்சியிலும். கூடவே நெறியாள்கை, ஒளியமைப்பு எல்லாவற்றிலும் சிறந்து நிற்கின்றது படம். படத்தின் முன் 30% பாகத்தில் Kate Winslet ஆடைகளுடன் இருப்பதை விட, இல்லாது இருப்பதுதான் அதிக நேரம். அது கூட விகாரமாக இல்லாது படத்துடன் இயல்பாக கலந்து விடுகின்றது.

தயாரிப்பாளர்கள் விடும் ஒரே பிழை, பட விளம்பரங்களில் படத்தை கிட்டத்தட்ட ஒரு மர்மப் படம் போன்று சித்தரித்திருப்பது. படத்தில் மர்மம் உண்டு என்றாலும், அது அங்கே படத்தின் அரைவாசியுடன் நின்றுவிடுகின்றது. படம் அடிப்படையில் ஒரு காதல் படம். தவிர, படத்தில் வரும் Michael’இன் ஆசிரியர் குறிப்பிடுவது போன்று, “குற்றவாளி” எனப்படுபவன் யார் என்பதை ஒரு ஆழமான கண்ணோட்டத்தோடு பார்க்க முனைவது படத்தின் மறைமுகமான நோக்கம். ஆங்கில பட இரசிகள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

“The Reader” IMDB இணைப்பு

15 பின்னூட்டங்கள் »

 1. இந்த பதிவுக்கு தமிழிஷ் லிங்க் வொர்க் ஆகலை தல. கொஞ்சம் பார்க்கறீங்களா!

  பின்னூட்டம் by ஹாலிவுட் பாலா — மார்ச் 28, 2009 @ 5:41 முப | மறுமொழி

  • thamilish இணைப்பிலிருக்கும் பிழையை நானும் கவனித்தேன். அதை திருத்தவும் முடியவில்லை; நீக்கவும் முடியவில்ல! 😦 ஆலோசனை ஏதாவது?

   பின்னூட்டம் by bmmaran — மார்ச் 28, 2009 @ 6:13 முப | மறுமொழி

 2. //ஆங்கில பட இரசிகள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.//
  உண்மை!!! ஆஸ்கர் ஜுரம் இருக்கறப்பவே இதை எழுதனும்னு நினைச்சி, மில்க்-கிற்கு வந்த வரவேற்பை பார்த்து விட்டுட்டேன். 🙂

  மிஸ் பண்ணக்கூடாத படம்.

  (மில்க் – யூத் விகடன் லிங்க் கொடுத்த பின்னாடிதான் அதை படிக்கவே வந்தாங்க).

  பின்னூட்டம் by ஹாலிவுட் பாலா — மார்ச் 28, 2009 @ 5:48 முப | மறுமொழி

 3. மறுபடியும், புதிதாக பதிவை லிங்க் கொடுங்க போதும். டூப்ளிகேட் வரும். அது பரவாயில்லை..

  பின்னூட்டம் by ஹாலிவுட் பாலா — மார்ச் 28, 2009 @ 6:22 முப | மறுமொழி

 4. dvd wrapper-ஐப் பார்த்துவிட்டு பேசிப்பேசியே கொல்வார்களோ என்று அஞ்சினேன். இனி பார்த்துவிடுகிறேன். நன்றி.

  பின்னூட்டம் by thingal sathya — மார்ச் 30, 2009 @ 10:27 முப | மறுமொழி

 5. இன்னும் பார்க்கவில்லை. லிஸ்டில் உள்ளது. பதிவிற்கு நன்றி.

  பார்த்து விட்டு மீண்டும் வருகிறேன்.

  பின்னூட்டம் by surya — மார்ச் 30, 2009 @ 12:21 பிப | மறுமொழி

 6. //ஆங்கில பட இரசிகள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.//
  உண்மை!!!///I don’t think so: this movie doesn’t seem to condamn child abuse – an adult having sex with a minor(under the age of consent)-

  பின்னூட்டம் by அனாமதேய — மார்ச் 30, 2009 @ 2:24 பிப | மறுமொழி

 7. Very true. I am an avid fan of Kate. You should see the movie JUDE. Kate acts naked in a couple of scenes. Far from being erotic the scenes were picturized so beautifully that you feel sorry for her (character in the movie). She deserves Oscar very much.

  Also, I liked Ralph’s acting in many movies. Especially, Schindler’s list.

  BTW, you have a wonderful sense for good movies. Best.

  பின்னூட்டம் by Dinesh — மார்ச் 30, 2009 @ 11:16 பிப | மறுமொழி

 8. நன்றி தினேஸ். நானும் Ralph’இன் ரசிகன்தான். “the constant gardener” படம் பார்த்தனீங்களோ?

  பின்னூட்டம் by bmmaran — மார்ச் 31, 2009 @ 1:28 முப | மறுமொழி

 9. கதை அல்லது சொல்லும் விதத்தில் ரீடர் முந்திக்கொண்டதோ என்னவோ தெரியவில்லை.ஆனால் ஆஸ்கர் போட்டிக்கு தகுதி பெற்ற ரீடர்,டவுட் படங்களில் டவுட் நடிப்பு,வசனங்களைப் பொறுத்த வரை அள்ளிக்கொண்டு போகிறது.டவுட் Merryl Streep 15 முறை ஆஸ்கர் நாமினேசனுக்கு வந்து விட்டாரே என்ற நினைப்பில் சரி ரீடர் Kate Winslet க்குன்னு கொடுத்தார்களோ என்னவோ.அதனால்தானோ என்னவோ Kate Winslet ஆஸ்கர் விருதில் சொன்னது ” I am sorry Merryl,but you have to suck that up”

  பின்னூட்டம் by rajanatarajan — ஏப்ரல் 2, 2009 @ 8:33 முப | மறுமொழி

 10. @rajanatarajan: நான் இன்னமும் Doubt பார்க்கவில்லை. என்றாலும் உங்களுடைய கருத்துடன் நான் உடன்படுகின்றேன். ஆஸ்கார், இவ்வாறான வேலை செய்வதுண்டு. Kate பலமுறை ஆஸ்காரிற்காக தெரிவுசெய்யப்பட்டிருந்தாலும் ஒருமுறையும் அதை வென்றதில்லை. Meryl அதற்கு நேர் எதிர். எனவே இந்த முறை Kate’இன் பக்கம் வோட்டுகள் சாய்திருப்பதில் ஆச்சரியமில்லை. ஆஸ்கார் என்பது என்ன, சக நடிகர்களின் வாக்குகளை வைத்து வழங்கப் படுவதுதானே.

  பின்னூட்டம் by bmmaran — ஏப்ரல் 2, 2009 @ 12:06 பிப | மறுமொழி

 11. ஆஸ்கார் என்பது என்ன, சக நடிகர்களின் வாக்குகளை வைத்து வழங்கப் படுவதுதானே.
  Exactely!!!
  Considering the fact that even Hugh Jackman, host of the 81st Academy Awards, didn’t watch The reader (he admitted it at the ceremony).
  I wonder how many had watched all the movies in competition before voting.

  பின்னூட்டம் by அனாமதேய — ஏப்ரல் 2, 2009 @ 5:17 பிப | மறுமொழி

 12. படம் நன்றாக இருந்தது.

  ஹோலோகாஸ்ட், ஆஷ்விட்ஸ், யூதன், நாஜி, ஜெர்மனி என்று இருந்தால் படத்துக்கு ஆஸ்கார் வாங்கும் தகுதி விரு விருவென்று அதிகரித்துவிடுகிறது.

  பின்னூட்டம் by vajra — ஏப்ரல் 8, 2009 @ 3:57 பிப | மறுமொழி

 13. படம் ரொம்பவே சுவாரசியமாக இருந்தது… கச்சிதமான விமரிசனம்… :))

  பின்னூட்டம் by VIKNESHWARAN — மே 6, 2009 @ 3:23 பிப | மறுமொழி

 14. good review

  பின்னூட்டம் by arul — மே 3, 2012 @ 7:35 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: