திரை விமர்சனம்

மார்ச் 31, 2009

Ong Bak 2 (2008): தாய்லாந்திலிருந்து வந்து இறங்கும் அதிரடி

Filed under: திரைப்படம் — bmmaran @ 4:16 முப
Tags:

Bruce Lee, Jackie Chan, Jet Li எல்லாரும் Martial Arts படங்களில் தங்களிற்கென ஒரு முத்திரை பதித்துச் சென்றவர்கள். அதில் ஒருவர் காலமாகிவிட, மற்ற இருவரும் முதுமை எய்திவிட, புதிதாக தாய்லாந்திலிருந்து வந்து இறங்கியிருக்கின்றார் Tony Jaa. தனக்கென்று சொல்லி Muay Thai என்று சொல்லப் படும் புதுவித சண்டைக் கலையை திரைக்கு அறிமுகப் படுத்தியிருக்கின்றார். முதலாவது Ong Bak (2003) படத்தோடு ஆக்ஸன் பட ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கின்றார்.

இந்த இரண்டாம் பாகம், 2003’ஆம் ஆண்டு படத்தின் தொடர்ச்சியல்ல. சற்று சம்பந்தமில்லாது தோன்றினாலும், இதுவும், இனிவரவிருக்கும் Ong Bak 3’உம் இணைந்து, முதலாவது Ong Bak படத்தின் முன்படமாக (prequel) அமையுமாம். படம் முற்று முழுதாக ஆக்ஸன் படம். எனவே, அங்கே ஒரு நூலளவுதான் கதையிருக்கின்றது. சரித்திர காலத்தில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், கூட இருந்து குழிபறிப்பவர்களால் அநாதை ஆகின்ற ஒரு அரச தளபதியின் மகனின் வாழ்க்கையை ஒட்டிப்போகின்றது. படம் தாய்லாந்து மொழியில்தான் இருக்கின்றது. எனவே subtitiles’ஐத் தேடிப்பிடித்தல் அவசியம். என்றாலும் அது பெரிய பாதகம் இல்லை ஏனென்றால், படத்தில் இருக்கும் கதை வசனத்தை விரல் விட்டு எண்ணிவிடலாம். மற்றப்படி ஆக்ஸன், ஆக்ஸன், ஆக்ஸன்தான்! என்றாலும் திகட்டாத விதத்தில் ஒளிப்பதிவும், படத்தொகுப்பும். முதலாவது Ong Bak, இதிலும் விட சற்றே சிறந்தது என்றாலும், ஆக்ஸன் ரசிகர்கள் சந்தோசமாக பார்க்கலாம்.

“Ong Bak 2” IMDB இணைப்பு

8 பின்னூட்டங்கள் »

 1. Protector படத்தையும் பாருங்க. இவரோட படத்தில் எந்த காட்சியும், ஸ்ட்ரிங் யூஸ் பண்ணி செஞ்சிருக்க மாட்டாங்க.

  Protector-ல் வரும் அந்த தொடர்ச்சியான ஆறுநிமிட சண்டை காட்சி மிக அருமையா இருக்கும். ஒரிஜினல் டிவிடியில் அதை மொத்தமே நான்கு ஷாட்களில் எடுத்ததை காட்டுவாங்க. அந்த நாலு ஷாட்டுமே ஓகே ஷாட்தான்.

  பின்னூட்டம் by ஹாலிவுட் பாலா — மார்ச் 31, 2009 @ 8:04 முப | மறுமொழி

 2. அட அப்ப இது ஆங்கிலப்படமில்லயா???
  அவசரப்பட்டு screen shot பார்த்து தரவிறக்க துவங்கிவிட்டேனே!!!!!!!!

  பின்னூட்டம் by Subash — மார்ச் 31, 2009 @ 11:38 முப | மறுமொழி

  • அது பிரச்சனை இல்லை. நாங்களெல்லாம் என்ன தாய்லாந்து மொழி தெரிந்தவர்களா என்ன? 🙂

   பின்னூட்டம் by bmmaran — மார்ச் 31, 2009 @ 11:49 முப | மறுமொழி

 3. Nobody speaks தாய்லாந்து because
  தாய்லாந்து is a country. (தாய் is a langage)

  பின்னூட்டம் by அனாமதேய — ஏப்ரல் 1, 2009 @ 5:57 பிப | மறுமொழி

 4. ஃஃNobody speaks தாய்லாந்து because
  தாய்லாந்து is a country. (தாய் is a langage)ஃஃ

  அடடட காமடியா??? ம்ம்ம்
  lol

  சப்டைட்டில் பார்த்தால் எனக்கு படம் பார்த்த பீலிங்கே வராதுங்க.
  படடொன்றை பார்த்தால் அப்படியே அதுக்குள்ள போய் இருக்கணும்.
  அங்க சிரிச்சா நானும் சிரிக்கணும். அழுதா எனக்கும் துக்கம் வரணும்.
  சப்டைட்டில வாசிக்கறதுக்குள்ள அடுத்த சீன் வந்தா எப்படி இதெல்லாம்!!!
  ம்ம்ம்

  விரைவில் ஈங்கிலத்தில் டப்பவேண்டுமென பிரார்த்தனை செய்கிறேன்
  ஹிஹி

  பின்னூட்டம் by Subash — ஏப்ரல் 2, 2009 @ 3:42 பிப | மறுமொழி

  • நான்தான் முதலேயே சொல்லிவிட்டேனே, இந்தப் படத்தை சப்டைட்டிலோடு பார்ப்பதால் எவ்வித குறையும் வராது. ஏனெனில் படத்தில் கதைவசனம் அவ்வளவு குறைவு. முக்கால்வாசிக்கு அடிபாடுதான்.

   பின்னூட்டம் by bmmaran — ஏப்ரல் 2, 2009 @ 5:43 பிப | மறுமொழி

 5. ஃஃஇந்தப் படத்தை சப்டைட்டிலோடு பார்ப்பதால் எவ்வித குறையும் வராதுஃஃ

  அப்ப றிசியும் பண்ணிட வேண்டியதுதான்
  🙂

  பின்னூட்டம் by Subash — ஏப்ரல் 3, 2009 @ 4:42 முப | மறுமொழி

 6. ஆமா, நான் ong bak பாத்தேன் purely action…nothing else…

  பின்னூட்டம் by அனாமதேய — ஏப்ரல் 5, 2009 @ 3:39 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: