திரை விமர்சனம்

மார்ச் 31, 2009

The Other End of the Line (2008): சிரியாவின் ஹாலிவூட் படம்

அண்மைக் காலமாக இந்தியத் துணைக்கண்டத்தின் தாக்கம் ஹாலிவூட்டில் தெரியத்தொடங்கியிருக்கின்றது. “Inside Man” ரகுமானின் “சய்ய சய்யா” இசையோடு ஆரம்பித்தது; அண்மையில் வந்த “The Accidental Husband” பல ரகுமான் இசையை கொண்டிருந்ததுடன், ஒரு முழு “தெனாலி” படப் பாட்டோடு முடிவடைந்தது. ஆஸ்கார் வரை சென்ற “Elizabeth: The Golden Age“இன் பின்னணி இசையில் ரகுமானின் பங்கும் உண்டு. இவ்வாறு ரகுமான் ஹாலிவூட்டில் நுளைந்து பல காலம்; அவருக்குக் கிடைத்த ஆஸ்கார், வெளிப்படையான ஒரு அங்கீகாரம் மட்டுமே. இவர் தவிர அடுத்த பிரபல்யம் ஐஸ்வர்யா ராய் — “Bride & Prejudice (2004)“இலிருந்து “The Pink Panther 2 (2008)” வரை பல ஹாலிவூட்டில் படங்களில் தோன்றியிருக்கின்றார். இப்போது கடைசியாக பாலிவூட்டிலிருந்து, ஹாலிவூட்டிற்கு இறக்குமதி நம்ம சிரியா சரன்.

சிரியா இருக்கிறார் என்ற ஒரு காரணத்திற்காகவே இந்தப் படத்தைப் பார்த்தது (நான் சிரியா ரசிகன் இல்லை என்றாலும்.) ம்ம்ம்…. சிரியாவுக்கு இனிவரும் காலத்திலேயாவது நடிப்பதற்கு நல்லவேறு ஏதாவது படம் கிடைக்கும் என்று நம்புவோமாக; இன்னொரு பக்கம் யோசித்தால், இந்தியாவில இவர் நடித்த படங்களோடு ஒப்பும்போது இது எவ்வளவோ பரவாயில்லை என்றும் தோன்றுகின்றது (எனக்குத் தெரிந்த வரையில்.)

சாதாரண ஹாலிவூட் (அல்லது பொலிவூட்) காதல் படம். பம்பாயிலிருக்கும் அமெரிக்க வங்கியொன்றிற்கான தொலைபேசி மையத்தில் (call center) வேலை செய்பவர் பிரியா (சிரியா சரன்.) மனது நிறைய கனவுகளோடு இருப்பவரிற்கு, பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் திருமணம் நிச்சயமாகியிருக்கின்றது. இவ்வாறு இருக்கும் காலத்தில் அமெரிக்காவில் இருக்கும் Granger (Jesse Metcalfe) என்னும் வாடிக்கையாளரோடு தொலைபேசியில் உரையாடும் இடத்தில் காதல் வயப்படுகின்றார். தான் San Fransisco’வில் இருப்பதாக பொய் சொல்லும் பிரியா, Granger வியாபார விடயமாக San Fransisco செல்வதையும் அறியுமிடத்து, ஒரு திடீர் தைரியத்தில் விமானமேறி அவரைச் சந்திக்க அமெரிக்கா சென்றுவிடுகின்றார் — வீட்டாரிற்குத் தெரியாமல் (பம்பாயில் அப்பிடி எல்லாம் செய்யலாமோ!!?) பிறகென்ன வழமையான மோதல், காதல், ஊடல், கூடல் என்று படம் போகின்றது (வரி பிசகாது!)

படத்தில் கதைக்கோ, நடிப்புக்கோ பெரிதாக இடம் இல்லையென்றாலும், படத்தின் முன்னணிகள் இருவரும் இளமைத் துள்ளலில் இருப்பதனால், படம் பார்ப்பதற்கு வெறுப்பாக இல்லை. சிரியா இரண்டு விதமாக ஆங்கிலத்தை பேசுவது (accent) நன்றாக இருக்கின்றது (அது உண்மையாகவே அவரது குரல் என்றால்.) பிரியாவின் அப்பாவாக வரும் அனுபம் கெர் ஹிந்தியில் பெரிய நடிகர் என்று நினைக்கின்றேன். என்றாலும் அவர் ஆங்கிலத்தில் உரையாடும்போது எங்கேயோ உதைக்கின்றது. அவரது ஆங்கிலம் பிழையென்று இல்லை. என்றாலும், இந்தியாவில் நடக்கும் சம்பவங்களை இந்திய மொழியிலேயே எடுத்திருக்கவேண்டும். அதை ஆங்கிலத்தில் எடுக்கும் போது ஒருவருமே கதாபாத்திரங்களோடு ஒட்டவில்லை. பம்பாயில் எல்லாரும் இப்ப ஆங்கிலத்தில்தான் பேசுகின்றார்களோ தெரியாது! காதல் பித்தர்களும், சிரியா கிறுக்கர்களும் பார்க்கலாம். மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ளவும்.

“The Other End of the Line” IMDB இணைப்பு

4 பின்னூட்டங்கள் »

 1. என்னங்க இது..? ஷ்ரியாவை… ‘பாலிவுட்’-ன்னு சொல்லிட்டீங்க? 😦 😦 😦

  மனசு கேக்கலை….! 😦

  🙂

  பின்னூட்டம் by ஹாலிவுட் பாலா — மார்ச் 31, 2009 @ 6:45 முப | மறுமொழி

 2. என் குற்றம்தான். உண்மையா ஆள் எந்த் மொழி? தெலுங்கோ? அப்பிடியென்றால் அது கொலிவூட்டுக்குள் வருமோ?

  பின்னூட்டம் by bmmaran — மார்ச் 31, 2009 @ 11:28 முப | மறுமொழி

 3. ஐயோ!!!!!
  சிரியாக்குட்டிய தெலுங்கு தமிழென்டு பிரிச்சு பேசாதீங்க
  நம்ம செல்லக்குட்டிதானே!!!
  இந்த மானிலமானா என்ன??

  பின்னூட்டம் by Subash — ஏப்ரல் 2, 2009 @ 3:44 பிப | மறுமொழி

  • அப்பனே ஆளை விடுங்கோ, சிரியா எந்த மாநிலம், மொழியெண்ட சண்டைக்கு நான் வரயில்லை!! 😀

   பின்னூட்டம் by bmmaran — ஏப்ரல் 2, 2009 @ 5:45 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: