திரை விமர்சனம்

ஏப்ரல் 2, 2009

The Spirit (2008): படத்தில் உயிரோட்டமே இல்லை

காமிக்ஸ் புத்தகங்களை வெள்ளித்திரைக்கு கொண்டுவருவது அண்மையில் வாடிக்கையாகிவிட்டது. அதில் இதுவும் ஒன்று. “Sin City”, “300” போன்ற வித்தியாசமான வெற்றிப்படங்களைத் (அவைகளும் காமிக்ஸ் புத்தகங்களிலிருந்து திரைக்கு வந்தவைதான்) தந்த இயக்குணர் Frank Miller‘இன் இன்னொரு படைப்பு இது. Sin City எடுக்கப் பட்ட அதே விதத்தில் இந்தப் படத்தையும் எடுத்திருக்கின்றனர். ஆனால், தனியே திரைபட வடிவமைப்பு மட்டும்தான் Sin City போன்று, அதைத்தவிர மற்ற எல்லாவற்றிலும் கோட்டை விட்டுவிட்டார்கள்.

காவல்துறை அதிகாரி Denny (Gabriel Macht), கடமையின் போது சுட்டுக்கொல்லப் படுகின்றார். வீரமரியாதையுடன் ஆளைப்புதைத்து விட்டு வந்தால், இரவோடு இரவாக உயிர்பெற்று புதை குழியிலிருந்து எழும்பி வருகின்றார். உயிர் பெற்று வருவது மட்டுமில்லை, இலகுவாக காயங்களிலிருந்தும், வலியிலிருந்தும் குணமடையும் உடலையும் பெற்றிருக்கின்றார். இதன் பின், தனது பழைய வாழ்விற்கு திரும்பச் செல்லாது, “The Spirit” என்னும் பெயரோடு சட்டத்தைக்காக்கும் முகமூடி அணிந்த வீரனாக உருவாகின்றார். இவரிற்கு எதிராக இவரைப் போன்றே உடல்வாகு கொண்ட “The Octopus” (Samuel L. Jackson) என்னும் வில்லன். முற்றுமுழுதாக சாகாவரம் பெற்று, கடவுளாக வரவேண்டும் என்பது Octopus’இன் கனா. அதற்கு, சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து எடுக்கப்பட்ட Hercules’இன் இரத்தத்தை தேடி அலைகின்றார் Octopus. இதற்கு இடையில், Denny’இன் பழைய காதல், புதுக்காதல், இடைக்காதல் என்று மணத்திற்கு வரிசையாய் பெண்குழாம். அவ்வளவு இருந்தும் பார்ப்பவர்களிற்கு இடையில் தூக்கம் வந்து விடுகின்றது!

படம் வருவதற்கு முன்பு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு. திரைக்கு வந்தபின் சப்பென்று போய்விட்டது. ஹாலிவூட்டின் பெருந்தோல்விகளில் இதுவும் ஒன்று. படத்தின் பரபரப்புக்கு ஒரு காரணம், அதில் இருக்கும் நடிகைகள் பட்டாளம்: Sarah Paulson, Eva Mendis, Scarlett Johansson, Stana Katic, Paz Vega, Jaime King என்று வரிசையாக பல கவர்ச்சிகரமான நடிகைகள். கடைசியில் பார்த்தால், படத்தில் எவருமே பெரிதாக கவர்ச்சிகரமாகத் தெரியவில்லை (அப்படியான ஒரு ஓளிவடிவம்.) படத்தி்ன் கதை சிறுபிள்ளைத்தனமானது, ஆனால் படம் சிறுவர்களிற்கு உகந்தது அல்ல. இடைக்கிடை நகைச்சுவை போல ஏதோ ஒன்றை முயல்கின்றார்கள். பார்ப்பவர்களிற்கு அங்கே சிரிக்கவேண்டுமோ, இல்லையோ என்று ஒரே தடுமாற்றம். கதையும், கதைவசனமும் அப்பிடியென்றால், நடிப்பைப் பற்றிக் கேட்கத்தேவையில்லை. Sarah Paulson’ற்குத்தான் அங்கே நடிப்பத்ற்கு சிறியதொரு வாய்ப்பு. Samuel L. Jackson’ஐப் போட்டு நாறடித்திருக்கின்றார்கள்.

பார்ப்பதற்கு அந்த நடிகைகளைத்தவிர படத்தில் ஒன்றுமே இல்லை. அந்த நடிகைகளைக்கூட, தனித்தனியே, அவர்களின் வேறு படங்களில் பார்ப்பது நல்லது. இதில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

“The Spirit” IMDB இணைப்பு

7 பின்னூட்டங்கள் »

 1. அடடா!!!!
  என்ன ஆச்சரியம்.
  நேற்றுத்தான் இந்தப்படத்தை தரவிறக்கி முடித்தேன். ஆரம்ப காட்சிகள் சிலவற்றைப்பார்த்தேன். சீரியசாக வரவேண்டிய சண்டைக்காட்சிகனெல்லாம் காமடியாகிவிட்டதும் பிறகு பார்க்கலாமென வைத்துவிட்டேன். ( ஒரு வேளை நான் தான் அப்படி நினைத்துனோ??? ஆரம்பத்தில் சாமுவேல் ஜாக்சனும் Spirit ம் ஆறு & சகதியில் நடக்கும் சண்டை.

  ஆனால் படத்தின் கலர் மிகவும் பிடித்தஜருக்கறது. ஆரஞ்சு மஞ்சள் கலவை.
  இனி ப்ர்த்துவிட வேண்டியதுதான்.

  விமர்சனத்திற்கு மிக்க நன்றி சகா

  பின்னூட்டம் by Subash — ஏப்ரல் 2, 2009 @ 3:35 பிப | மறுமொழி

 2. இந்தப் படத்தின் கலர் பிடித்திருந்தால், Sin City படத்தைப் பாருங்கோ, அதுதான் இப்படியான படங்களிற்கு மூலம். தவிர அதன் கதையோட்டம் இதிலும் விட நல்லது…

  பின்னூட்டம் by bmmaran — ஏப்ரல் 2, 2009 @ 5:57 பிப | மறுமொழி

 3. ஃஃSin City படத்தைப் பாருங்கோ, அதுதான் இப்படியான படங்களிற்கு மூலம். தவிர அதன் கதையோட்டம் இதிலும் விட நல்லது…ஃஃ

  இந்தப்பட்த்தோட Divx இருக்கு. ஆரம்பத்தில் கொஞ்சம் பார்த்தேன். ஒண்ணும் விளங்கவில்லை. அப்படியே வச்சிட்டேன்.
  ( ஜெசிக்காவுக்காகவாவது பார்க்கணும் )

  பின்னூட்டம் by Subash — ஏப்ரல் 3, 2009 @ 4:40 முப | மறுமொழி

 4. ம்ம்ம்.. யோசித்துப் பார்த்தால் நீங்கள் சொல்வது சரிதான். Sin City’இன் கதையில் பெரிதாய் ஒன்றும் இல்லை, என்றாலும் அது சொல்லப் பட்ட விதம் நல்லமாதிரி. தவிர, படம் உண்மையில் மூன்றோ, நாலோ தனித்தனிக் கதைகளின் கோர்ப்புத்தான். சில கதாபாத்திரங்கள் அந்த கதைகள் எல்லாவற்றிலும் தோன்றினாலும், உண்மையில் அந்தக் கதைகளிற்கு இடையில் சம்பந்தமொன்றும் இல்லை.

  Sin City 2 அடுத்த வருடம் வெளிவர இருக்கின்றது. உங்கள் தவிப்பு புரிந்து ஜெசிக்கா அதிலும் தோன்றுவதாக இருக்கின்றது. 😉

  பின்னூட்டம் by bmmaran — ஏப்ரல் 3, 2009 @ 5:17 முப | மறுமொழி

 5. Sin City சுத்தமாக புரியாததால் அப்படியே மற்ந்து விட்டுட்டேன். படம் வந்த புதிதில்தான் பார்த்தேன். ஏதாவொரு டிவடியில் செமித்து வைத்திருக்க வேண்டும் தேடி எடுத்துதான் பார்க்கணும்.

  ஃஃ Sin City 2 அடுத்த வருடம் வெளிவர இருக்கின்றது. உங்கள் தவிப்பு புரிந்து ஜெசிக்கா அதிலும் தோன்றுவதாக இருக்கின்றது. ஃஃ
  ஹிஹி
  தல, நாங்க இப்பல்லாம் Elizabeth Bank க்கு்காகத்தான் தவிப்பையெல்லாம் வெளிப்படுத்துவோம்.
  Fantastic 2 லயே அம்மணிக்கு வயசாகிவிட்டது தெரிகிறது.

  பின்னூட்டம் by சுபாஷ் — ஏப்ரல் 7, 2009 @ 3:29 பிப | மறுமொழி

 6. ம்ம்ம்… Jessica’விலும் பார்க்க, Elizabeth Banks’ற்கு 7 வயது அதிகம்…

  பின்னூட்டம் by bmmaran — ஏப்ரல் 7, 2009 @ 5:58 பிப | மறுமொழி

 7. //ம்ம்ம்… Jessica’விலும் பார்க்க, Elizabeth Banks’ற்கு 7 வயது அதிகம்…//

  Iooooooooooo
  back to jesicca 🙂 🙂 🙂

  பின்னூட்டம் by Subash — ஏப்ரல் 8, 2009 @ 4:18 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: