திரை விமர்சனம்

திசெம்பர் 22, 2009

ட்விட்டர் விமர்சனம்

பழசிராஜா: பில்ட் அப் கொடுத்த அளவுக்கு படத்தில் பிரம்மாண்டம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. லாங் ஷாட்டில் கூட மொத்தம் நூறு படை வீரர்களே தெரிகிறார்கள். Patriotism என்ற ஒரு உணர்வால் படம் தப்பிப் பிழைத்திருக்கிறது. சரத்குமார் இருந்திராவிட்டால் படம் ரொம்பவே போர் அடித்திருக்கும்.

சிவா மனசுல சக்தி: நல்ல ஒரு கலக்கலான படம். சிவா என்கிற அந்த லோக்கல் சென்னைவாசி கேரக்டருக்கு அப்படியே பொருந்துகிறார் ஜீவா. சந்தானத்தின் காமெடியும் யுவனின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம். அனுயாவின் பிறந்தநாள் காட்சியோடு படத்தை முடித்திருக்க வேண்டும், தேவையில்லாமல் அதற்கு பிறகு ஒரு 10 நிமிடம் காட்சிகளை இழுத்து கடைசியில் கடுப்படித்துவிட்டார்கள். மற்றபடி சூப்பர்.

யோகி: அமீர் வேகமாக ஓடுகிறார், ஸ்டைல் ஆகா நடக்கிறார், நன்றாக ஆடுகிறார் அப்படியே கொஞ்சமாக நடிக்கிறார். நத்திங் ஸ்பெஷல் அபௌட் தி மூவி. ஜஸ்ட் ஒரு ரவுடியின் மறுப்பக்கம். அவ்வளவுதான்.

நான் அவன் இல்லை 2: அவனா நீ? முதல் பார்ட்டில் இந்தியாவில் நான்கு பெண்களை ஏமாற்றுவார், இது பார்ட் டூ அதனால் வெளிநாட்டில் நான்கு பெண்களை ஏமாற்றுகிறார். படம் முழுவதும் ஒரே கவர்ச்சி மழை. படத்தில் வரும் அணைத்து கேரக்டர்களும் சொல்லும் ஒரு வசனம் “ரொம்ப இன்டெலிஜென்ட் கிரிமினல் அவன்”. பேசாம படத்துக்கு இதையே தலைப்பா கூட வைத்திருக்கலாம். கிளைமாக்ஸ் முடிந்தவுடன் வணக்கத்திற்கு பதில் சிம்பாலிக்காக ஒரு எச்சரிக்கை போட்டார்கள், அது வேற ஒன்னும் இல்ல நான் அவன் இல்லை பார்ட் த்ரீ வருமாம்.

—-
Nilofer Anbarasu
http://kick-off.blogspot.com

2 பின்னூட்டங்கள் »

  1. http://mapleilai.wordpress.com/ மிகவும் நன்று …. எனது பக்கத்தில் அவதார் திரைப்படம் பற்றி எழுதி உள்ளேன். பார்த்து பயனுறவும். கருத்துக்களை இடவும்

    பின்னூட்டம் by IQBAL SELVAN — திசெம்பர் 23, 2009 @ 4:52 பிப | மறுமொழி

  2. டிவிட்டர் ஸ்டைல் அசத்தல்.

    தொடரவும்.

    பின்னூட்டம் by butterfly Surya — பிப்ரவரி 10, 2010 @ 6:55 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: