திரை விமர்சனம்

திசெம்பர் 13, 2007

300 திரைவிமர்சனம்

300 திரைப்படத்துக்கான விமர்சனத்தை வாசிக்க முன்னர் ரெயிலரை ஒரு தடவை பாருங்கள். ரெயிலரைப் பார்த்தால் தெரியும் படம் எவ்வளவு அகோரமாகன சண்டைக் காட்சிகள் நிறைந்தது என்பது.

ஒரு நாள் ஸ்பாட்டா வீரர்களின் நகருக்கு வரும் பாரசீகச் செய்தித் தூதுவன் ஸ்பாட்டாவைச் சரணடையுமாறு வேண்டுகின்றான். இதனால் ஆத்திரம் கொள்ளும் ஸ்பாட்டா அரசன் செய்திகொண்டு வந்த தூதுவர்களை கொலை செய்வதுடன் யுத்தத்திற்குத் தயாராகின்றான்.

ஸ்பாட்டாக்கள் என்பவர்கள் பிறவியிலேயே வீரர்கள், யுத்தத்திற்காகப் பயிற்றுவிக்கப்ட்டவர்கள். இரக்கம், மரணம் பற்றியெல்லாம் அக்கறைப்படாதவர்கள். சிறுவயதில் இருந்தே இதற்கான பயிற்சி இவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

யுத்தத்திற்குச் செல்ல முதல் அரசன் கெட்ட சக்திகளை பிரார்த்தித்து அவர்களின் அனுமதியுடனேயே யுத்தத்திற்குச் செல்ல வேண்டும் ஸ்பாட்டாக்களின் பாரம்பரியம். மன்னனால் கூட அதை மீற முடியாது. அவர்களிடம் அரசன் திட்டத்தை விளக்குகின்றான். ஆனாலும் அந்த மத குருமார்கள் ஒராக்கிள் எனும் பெண்ணிடம் கேட்க வேண்டும் என்கின்றனர். ஒராக்கிள் என்ற பெயரில் நகரில் இருக்கும் அழகான பெண்ணை இந்த குருமார்கள் பெற்றுவிடுவர். அவளின் அழகே அவளுக்கு சாபமாகும். இந்த மத குருமார் பாரசீகத்திடம் பணம் வாங்கிக்கொண்டு சண்டைக்குப் போக ஒராக்கிள் அனுமதிக்கவில்லை என்று கூறிவிடுகின்றனர்.
(more…)

திசெம்பர் 12, 2007

பிளட் ரைன்

பிளர் ரைன் (Blood Rayne) ஆங்கில சினிமாக்காரர்கள் பலகாலம் புளிந்து சக்கைபோட்ட ட்ரக்குல்லாத் திரைப்படமாகும். ஒரு பெண் பாதி மனிதனாகவும் பாதி ட்ரகுல்லாவாககும் இருக்கின்றாள். இவளைச் சுத்தியே கதை நகர்கின்றது.ட்ரகுல்லாத் திரைப்படங்களைப் பார்பபவராயி்ன் இந்தத் திரைப்படத்தை நீங்கள் காணலாம். வன்முறை மற்றும் சில காட்சி அமைப்புகள் சிறுவருக்கு ஏற்றதல்ல! ஆங்கில விக்கியில் இத்திரைப்படத்தின் பக்கம் இங்கே.

திசெம்பர் 5, 2007

தி டிப்பார்டட்

டூம், போக்கிரி போன்ற சாதாரண இந்திய பொலீஸ், திருடன் திரைப்படங்களைப் பார்த்து புளித்துப் போனவர்கள் மாற்றாக இந்தத் திரைப்படம் த டிப்பார்ட்டட் ஐப் பார்க்கலாம். நான்கு ஒஸ்கார் விருதுகளைத் தட்டிய திரைப்படம் என்பதால் சுவாரசியத்துக்கு குறைவிருக்கும் என்று சந்தேகப் படத்தேவையில்லை. ஆஸ்காரிற்கு அப்பால் சுமார் 40 விருதுகளை இந்தத் திரைப்படம் அள்ளியுள்ளது.

உண்மையில் இந்தத் திரைப்படம் ஒரு ஹாங் ஹாங் திரைப்படத்தின் (WuJianDao – Internal Affair) மீளாக்கமாகும். ஆயினும் அத் திரைப்படத்தை விட இது சிறப்பாக இயக்கப்பட்டுள்ளதாக ஹாலிவூட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திரைப்படத்தின் நாயகன் நான் அறிமுகப் படுத்தத் தேவையில்லாதவர். அவர்தான் டைட்டானிக் நாயகன் லியனார்டோ டிக்காப்பிரியோ. படிப் படியாக உயர்ந்து நடிப்பில் தடம் பதித்து வருகின்றார் டிக்காப்பிரியோ.
(more…)

நவம்பர் 24, 2007

ஆஃப்டர் த சன் செட்

நேரம் கிடைக்கும் போது பார்த்து மகிழக் கூடிய இன்னொரு திரைப்படம்தான் இந்த After the sunset. ஒரு வைரத்தை ஒரு கள்வன் களவாடுவதுடன் திரைப்படம் தொடங்குகின்றது. வைரத்தைக் களவாடும்விதம் அழகானது. பரபரப்பாகச் செல்லும்.

யார் அந்தக் கள்வன் என்று பார்த்தால் பிரபல நடிகர் பியர்ஸ் புரொஸ்னன். எப்.பி.ஐ ஏஜென்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அந்த வைரத்தைக் களவாடிவிடுகின்றார்.
(more…)

நவம்பர் 20, 2007

ஹரி பொட்டர் 5

ஹரி பொட்டர் புத்தகம்தான் வாசிச்சுமுடிந்த பாடாய் இல்லை (70 வீதம் வாசிச்சாகிவிட்டது) சரி படத்தையாவது பார்த்து தொலைப்போம் என்று நேற்று டிவிடிக் கடைக்குப் போக முடிவெடுத்தேன்.

இங்க இருக்கிற தமிழ் பொடியள் ஹரி பெயரைக் கேட்டாலே ஓடிவிடுவாங்கள், இருக்கிற சில சிங்களப் பொடியளும் பெட்டயளும்தான் ஹரி புத்தகம் படம் என்று பைத்தியமா இருக்குங்கள். ஏற்கனவே படம் பார்த்த சில நண்பர்களிடம் கருத்துக் கேட்டபோது… It’s ok.. It’s ok macho! என்றே அவர்களது பதில் வந்தது. என்னானாலும் பார்ப்பது என்று நான் ஏற்கனவே முடிவெடுத்ததால் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.

இருந்தாலும் மனம் கேட்காமல் ஒரு ஹரி இரசிகையிடம் படம் எப்படி என்று கேட்டபோது.

“Oh… Mayu… Don’t watch it, it’s a total disaster. This is not what we have expected in the movie”

என்று சொன்னார்.

என்னடா இது, இப்படிக் கரைச்சலாகிட்டுதே என்று நான் அரை மனதுடன் டிவிடிக் கடைக்குச் சென்று டிவிடியையும் பெற்றுக்கொண்டேன்.

(more…)

ட்ரான்ஸ்போர்மர்ஸ்

பல்கலைக்கழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நேற்று முடிவடைந்து விட்டதால் ஒரு திரைப்படம் பார்ப்போம் என்று முடிவு செய்தேன். என்ன பார்க்கலாம் என்று நினைத்தபோது, பரீட்சை காரணமாக தியட்டரில் பார்க்க முடியாமல் போன ரஷ் அவர் 3, அல்லது ட்ரான்ஸ்போமர்ஸ் பார்ப்பது என்று முடிவு செய்தேன். ஏற்கனவே எனது உறவுக்காரப் பொடியன் ஒருவன் ட்ரான்ஸ்போர்மர்ஸ் திரைப்படத்தை இணையத்தில் இறக்கி வைத்திருந்தான். எனவே அதைப் பார்ப்பது என்று முடிவுசெய்தேன்.

ஏற்கனவே இதைப்பார்த்த என்னுடைய அனேக நண்பர்களும், அந்தமாதிரிப்படம் மச்சான் கட்டாயம் பார் என்று பரிந்துரைத்திருந்தனர். சிலர் சும்மா மாறி மாறி டப்பு டப்பு என்று சுடுவார்கள் என்று கூறியிருந்தனர். ஆயினும் பெரும்பாலானவர்கள் நல்ல திரைப்படம் என்று சொல்லியதால் துணிந்து பார்க்க முடிவெடுத்தேன். 😆
(more…)

ஓகஸ்ட் 6, 2007

உச்சம்!

Bourne Ultimatum பல மாதங்களுக்குப் பிறகு வந்துள்ள தரமான ஹாலிவுட் திரைப்படம். தாராளமாகப் பார்க்கலாம். நல்ல திரையரங்கில் பார்க்கவும்.

ஜூலை 15, 2007

சிவாஜியை விஞ்சிய படம்!

Filed under: ஆங்கிலத் திரைப்படம் — பாலாஜி @ 8:06 பிப
Tags: ,

சிவாஜிதான் கடந்த பல வருடங்களில் நான் பார்த்த மிகமட்டமான படமென்று நினைத்திருந்தேன். அந்த ‘சாதனை’ ஒரே வாரத்தில் முறிந்துவிட்டது. இந்த Transformers ஐவிட மட்டமான படத்தை ஈரேழு பதினான்கு உலகங்களிலும் அண்டம் அழியும்வரை யாராலும் உருவாக்கமுடியாது. மேகன் பாக்ஸை மட்டும் கொஞ்சம் ரசிக்கலாம்!
(more…)

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.